தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ் என்று இணையத்தில் பரவி வருகிறது.

Advertisment

rashmika mandana

விஜய்யின் 64வது படத்தை இந்த பெண் இயக்குனர்தான் தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தை இயக்கிய சினேகா பிரிட்டோதான் விஜய்யை வைத்து தயாரிக்க இருக்கிறார்.

மேலும் சினேகா பிரிட்டோ, விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் நடிக்கவுள்ள 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தை தயாரிப்பது சினேகா பிரிட்டோ என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ‘தளபதி 64’ படத்தில் அவர் உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Advertisment

alt="rashmika" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="2cf9d827-cb61-4e4e-a931-e665417cfd0a" height="137" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105_18.png" width="400" />

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல்கள் கசிந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா விஜய்க்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தளபதி 63 இல் விஜய்யுடன் இவர் நடிக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.